முக்கனி கலவை
கோழிலை வாழைக் கோள் மிகு பெருங்குலை
ஊழுறு தீம்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு
இப்பாடல் கபிலரால் பாடப்பெற்ற அகநானூறின் 2-வதுபாடலில் ,1-3 வரியில் உள்ளது .
குறிஞ்சி நில மக்கள் மலையும் மாலை சார்ந்த பகுதியில் வாழ்ந்தனர். அந்த மக்கள் முக்கனியாக விளங்கும் மாங்கனி ,பலாப்பழம் ,வாழைப்பழத்தை சுவையாக உண்டனர்.புலவர் இந்த மூன்று கனிகளையும் குரங்கு உண்டதாக குறிப்பிடுகிறார்.மனிதனால் பயிரிடப்பட்ட மா ,பலா ,வாழையை முதலில் குரங்கு உண்ணுமாம்.இதிலிருந்து சங்க தமிழர் மா ,பலா ,வாழையை விரும்பி வளர்த்து உண்டனர் என அறிய முடிகிறது .
முக்கனி கலவையை எப்படி செய்து இருப்பார்கள் என பார்ப்போம்
தேவையான பொருட்கள் :
கனிந்த மாம்பழம் -2
கனிந்த வாழைப்பழம் -2
தேன் -3டீஸ்பூன்
பலாச்சுளை -5
செய்முறை :
தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம் ,தீஞ்சுவை உடைய மாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும் ,கூடவே கொட்டையை நீக்கி ,சிறு துண்டுகளாக நீக்கிய பலாசுளைகளை நறுக்கிய வாழை ,மாம்பழ துண்டுகளுடன் சேர்க்கவும் .இவைகளுடன் தேனை சேர்த்து ஒன்றாக பிரட்டவும் .சுவையான முக்கனி கலவை தயார் .
தேவையெனில் சிறிது மிளகு தூளை சேர்த்து முக்கனி கலவை செய்யலாம்

கருத்துரையிடுக